பதைபதைக்கும் வீடியோ... நெடுஞ்சாலையில் விமானம் நொறுங்கி விழுந்து 3 பேர் உடல் கருகி பலி... விண்ணை முட்டும் புகை!
Dinamaalai April 14, 2025 02:48 PM

 

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விமானத்தில் 3 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. 

விமானம் விபத்துக்குள்ளானதால் 3 பேர் உயிரிழந்திருப்பதோடு நெடுஞ்சாலையில் காரில் பயணித்த ஒருவரும் படுகாயம் அடைந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு போகா ரேடன் விமான நிலையத்திற்கு அருகே இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விமானம் விழுந்த இடத்தில் அதிக அளவு புகை மூட்டம் காணப்படும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.