“அவங்க உங்க செய்தி தொடர்பாளர் தான்”… ஆனா அந்த டிரஸ் எங்களோடது… அமெரிக்காவிடம் வம்பிழுக்கும் சீனா… கடைசியில் படையப்பா பட காமெடி மாதிரி ஆகிட்டே.!!!
SeithiSolai Tamil April 16, 2025 12:48 AM

அமெரிக்க அரசியல்வாதி கரோலின் லீவிட் அணிந்திருந்த ஆடையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட லேஸ் துணி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சீன தூதுவர் ஜாங் ஷிஷெங் குற்றம் சாட்டியதை தொடர்ந்து சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட் என்பவர் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் ஆடையை அணிந்த புகைப்படம் வைரலான நிலையில் சீன தூதரகத்தின் தலைவர் ஜாங் ஜிஷெங் தன்னுடைய x பக்கத்தில் இது குறித்து பதிவிட்டார்.

இந்த பதிவு வைரலான நிலையில் பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் லீவிட் அணிந்திருந்த ஆடையில் பயன்படுத்தப்பட்ட லேஸ் துணி சீனாவின் மாபு என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டதென ஒரு ஊழியர் தெரிவித்திருந்தார். இன்னொருவர் “சீனத் தயாரிப்புகளை விமர்சிக்கும் ஒருவர் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு நிற்பது நகைச்சுவையுடன் கூடிய தருணம்” என கூறிய நிலையில் , “ஒருபுறம் சீனாவை திட்டிக் கொண்டே இருப்பவர், அந்த நாடு தயாரித்த ஆடையை அணிவது வெறும் அரசியல் கணக்கு” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு வைரலான நிலையில் ஒரு முக்கிய அரசியல்வாதி வெளியில் பேசும் கருத்துகளுக்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஆடை கள் இடையேயான முரண்கள் குறித்து தற்போது சர்ச்சைகள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் படையப்பா படத்தில் நடிகர் செந்தில் மாப்பிள்ளையாக இருக்கும் நிலையில் “மாப்பிள்ளை அவர்தான்..,ஆனால் அவர் போட்டிருக்கும் டிரஸ் என்னுடையது” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறுவது போன்று தற்போது இந்த விவகாரம் நெட்டிசன்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.