உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் இ-மெயில் முகவரிக்கு ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாக நேற்று ஏப்ரல் 14ம் தேதி இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து சைபர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அயோத்தி, பாரபங்கி மற்றும் அருகாமையிலுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து கோவிலின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அனுப்பப்பட்டுள்ள இ-மெயில் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவரும் பாதுகாப்பு அமைப்புகள் அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்கலாம்.மத்திய, மாநில அரசு அதிகாரிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அயோத்தி ராமர் கோவில் 2024 ம் ஆண்டு கிட்டத்தட்ட 13.5 கோடி சுற்றுலா பயணிகளால் பார்வையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.