அடக்கடவுளே..!! மேடையில் சறுக்கி விழுந்த பிரபல பாடகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வீடியோ வைரல்..!!!
SeithiSolai Tamil April 15, 2025 06:48 PM

அமெரிக்க பாடகர் டேவிட் அந்தோணி பரத். இவர் கடந்த 2022ல் இயர் வித் மீ மற்றும் ரொமாண்டிக் ஹோமி சைட் ஆகிய தனிப்பாடல்கள் மூலம் டிக் டாக்கில் வைரல் ஆனார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார்.

இதுபோன்று சமீபத்தில் கலிபோர்னியாவில் உள்ள எம்பயர் போலோ கிளப்பில் d4vd என்ற தொழில் ரீதியான இசை மற்றும் கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த அவர் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஸ்டன்ட் செய்ய முயன்று பின்னோக்கி சென்றார். ஆனால் அந்த ஸ்டன்ட் திட்டமிட்டபடி நடைபெறாமல் கூட்டத்தின் முன் சறுக்கி கீழே விழுந்தார்.

இதனால் சில நிமிடம் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடீயோவை பாடகர் டேவிட் தனது வலைதள பக்கத்தில் தானே பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதனை வலைதளத்தில் ஒருவர் “d4vd tried doing a flip during his Coachella performance and accidentally face-planted” என்ற விளக்கத்துடன் பகிர்ந்ததும் அது வைரலாக பரவியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.