“1 நிமிஷத்துக்காக வேலையிலிருந்து தூக்கிய நிறுவனம்”… இதெல்லாம் ஒரு காரணமா…? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!
SeithiSolai Tamil April 16, 2025 01:48 AM

சீன நாட்டில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது குவாங்டங் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வாங் என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து ஒரு நிமிடம் முன்னதாகவே கிளம்பியுள்ளார்.

வெறும் ஒரு நிமிடம் முன்பு வேலை முடிந்து அந்த பெண் கிளம்பிய நிலையில் அந்த பெண்ணை அதற்காக அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துவிட்டது. கடந்த 3 வருடங்களாக வாங் (28) அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் வேலையில் இருந்து சீக்கிரம் புறப்பட்டதற்காக பணியில் இருந்து அந்த நிறுவனம் காரணம் கூறியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அது எவ்வளவு இழப்பீடு என்ற விவரம் வெளிவரவில்லை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.