கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் விசித்திரமான போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அதாவது தலையணையை வைத்து சண்டையிடும் போட்டி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒரே இடத்தில் குவிந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
இந்த போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 7000 பேர் ஒன்று கூடி இந்த போட்டியில் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.