தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக காணப்பட்டது. நேற்றும் அதிகளவில் வெயில் சுட்டெரித்தது. மாலை 4.30 மணிக்கு மேல் வானில் மேகக்கூட்டம் திரண்டது.
தொடா்ந்து நேற்று மாலை சுமாா் 5 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலையும் கோவில்பட்டியில் மழை பெய்து வருவதால் பூமி குளிர்ந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.