பயங்கரம்….! பூசாரியின் தலையில் குழவி கல்லை போட்டு கொன்ற கொத்தனார்…. பரபரப்பு சம்பவம்….!!
SeithiSolai Tamil April 20, 2025 07:48 PM

புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் கோவில் பூசாரி. இவருக்கும் கொத்தனாரான தமிழரசன் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கோபத்தில் தமிழரசன் குழவி கல்லை எடுத்து சுந்தரியின் தலையில் போட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சுந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து விசாரித்தனர். அப்போது வாய் தகராறு காரணமாக சுந்தரை கொலை செய்ததாக தமிழரசன் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.