சிவகங்கையில், முதலமைச்சரால் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்ட "கலைஞர் கைவினைத் திட்டம்" விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கலந்து கொண்டார்.
தமிழரசி:
அவர் அமைச்சர் முன்னிலையில் தெரிவித்திருப்பதாவது,"மானாமதுரை சிப்காட்டில் தனியார் உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்கப்பட உள்ளது.
இந்த தொழிற்சாலையை மக்கள் விரும்பவில்லை. எனவே ஆலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி எதையும் செய்யாதீர்கள் என்று மாவட்ட கலெக்டரிடமும், அமைச்சரிடமும் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
தமிழரசி எம்.எல்.ஏ. மருத்துவ கழிவு ஆலையை மக்கள் விருப்பத்துக்கு எதிராக அமைக்க வேண்டாம் என அமைச்சர் முன்னிலையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முதல்மைச்சர் என்ன பதில் கூற போகிறார் ? என்று பல தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.