கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெச் ஆர் எஸ் லேஅவுட் பகுதியில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடைய மனைவி மீது சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 1981 ஆம் ஆண்டு ஐபிஎஸ் சேவையில் பணியாற்றிய ஓம் பிரகாஷ் கடந்த 2015 முதல் கடந்த 2017 ஆம் ஆண்டு வரை டிஜிபி மற்றும் ஐஜிபியாக பணியாற்றியவர்.
இவர் பீகார் மாநிலம் சாம்பரான் பகுதியில் பிறந்தவர். இவர் புவியியல் துறையில் எம்எஸ்சி பட்டம் பெற்றிருந்த நிலையில் ஐபிஎஸ் தேர்வுக்கு படித்து பணியில் சேர்ந்தார். இவர் திடீரென உயிரிழந்த நிலையில் மனைவி கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். மேலும் இந்த செய்தி கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணைகள் நடைபெறுகிறது.