உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிஜ்னோரில் உள்ள ஒரு மொபைல் கடையில் சமீபத்தில் பயங்கர சம்பவம் நடந்தேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் கடைக்கு வாடிக்கையாளராக நடித்து அங்கிருந்த கடைக்காரரின் கண்களில் மிளகாய்ப் பொடி வீசி, அங்கிருந்த ரூ.50,000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடுக்கிடும் சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
சிசிடிவி வீடியோவில், முகமூடி அணிந்து கடைக்கு வந்த அந்த நபர், சுஹைல் என்ற கடைக்காரரிடம் முதலில் ரூ.19க்கும், பின்னர் ரூ.29-க்கும் ரீசார்ஜ் செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். சுஹைலின் கண்களில் மிளகாய்ப் பொடி வீசிவிட்டு, மேசையில் வைத்திருந்த பணத்தைப் பறித்து கடையை விட்டு ஓடிவிட்டார்.
பயந்த நிலையில் பதறிய சுஹைல், தனது கண்களைத் திறக்க முடியாமல் தவித்தார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காண முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.