மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜிஎஸ்டி வரியால் நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறுவது மிகவும் தவறு. முன்பு இருந்த வரி தான் தற்போது ஜிஎஸ்டி வரியிலும் இருக்கிறது. ஆனால் மோடி தனியாக ஜிஎஸ்டி வரி விதிப்பது போல் மக்களிடம் பேசப்படுகிறது. ஜிஎஸ்டி வரியை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கிறோம் என்று கூறுவது முற்றிலும் தவறு.
ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஜிஎஸ்டி விவகாரத்தில் என்னால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் ஜாதி கொடுமை என்பது அதிகமாக இருக்கிறது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று கூறுவது அரசியல் ஆதாயம் என்றார்.