தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அதிமுக பிரமுகர் நேரு. இவர் வயல் வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களை ஏற்றிகொண்டு சென்றுகொண்டிருந்தார். இவரது வாகனம் ராமாபுரம் அருகே விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நேரு சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் ஒன்று நேருவின் இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக மோதிவிட்டது.
இந்த கோர விபத்தில் அதிமுக பிரமுமர் நேரு மற்றும் அவருடன் இருசக்கர வாகனத்தில் வயல் வேலைக்காக சென்ற இரண்டு பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த காவல்துறை விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.