தலைவர் கரங்களுக்கு வலுசேர்ப்போம், வாகை சூடுவோம்... தவெக பூத் கமிட்டி கூட்டம்!
Dinamaalai April 21, 2025 08:48 PM

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 26 27 தேதிகளில்  பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம்  தவெக தலைவர் விஜய் தலைமையில்  நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட  கருத்தரங்கில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து பூத் கமிட்டி கருத்தரங்கில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்.

இது குறித்து வெளியான  அறிக்கையில், ”கோவை குரும்பாளையம் SNS கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள்.


இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் . அத்துடன், ”ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள நம் வெற்றித் தலைவர் கரங்களுக்கு வலுசேர்ப்போம். வாகை சூடுவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.