நேற்றையப் (ஏப்ரல் 20) போட்டியில் பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியக் கோலி ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருக்கிறார். இந்நிலையில் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கோலி, “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. 2 புள்ளிகள் என்பது பிளே ஆஃப் தகுதி பெறுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தப் போட்டியில் கூடுதலாக அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னை விட தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடினார். அவருக்குத்தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும். எதற்காக எனக்கு விருது அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை.
இந்த மெகா ஏலம் எங்களுக்கு சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா, பட்டிதார் ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...