இந்தியாவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை நேற்று (ஏப்ரல் 21) அதாவது 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 உயர்ந்து, ஒரு சவரன் 72,120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து 9,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹111 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,11,000 ஆகவும் உள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் 72 ஆயிரம் ரூபாயை தாண்டி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இது குறித்து பொருளாதார நிபுணரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சீனிவாசன் கூறுகையில், ''அமெரிக்கா-சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போரால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். வரும் காலத்தில் கிராம் 10,000 தாண்டும்.'' என்று பொருளாதார நிபுணர் சீனிவாசன் கூறினார்.