அடுத்த ஆஸ்கர் விருது விழா எப்போது? - வெளியான முக்கிய அறிவிப்பு.!
Seithipunal Tamil April 22, 2025 11:48 PM

சினிமாத் துறையில் வழங்கப்படும் விருதுகளில் தலைசிறந்த விருது ஆஸ்கர். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் லட்சியமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த ஆஸ்கர் விருது சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த நிலையில், அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி மாதம் 22ம் தேதி வெளியாகும் என்றுத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள 100-வது ஆஸ்கர் விழா முதல் விருது வழங்கப்படவுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.