சென்னை மாவட்டம் வடபழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவர் தனது தந்தையின் அனுமதி இல்லாமல் காரை ஓட்டி சென்றார். அந்த கார் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த முதியோர் மீது மோதியது.
இதனால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் ஒரே மாவட்டத்தில் 7 பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
அந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் 7 பள்ளி மாணவர்கள் ஒரே வாகனத்தில் பயணம் செய்தது உறுதியானது.
அந்த மொபெட் ஒரு மாணவனின் தாய் கஸ்தூரி என்பவரது பெயரில் பதிவாகி இருந்தது. இதனால் மாணவனிடம் வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்த அவரது தாய் கஸ்தூரிக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.