Vidamuyarchi: கடந்த பிப்ரவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கினார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்தது. ஏனெனில் துணிவு படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து வெளியான திரைப்படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் படம் வெளியானது.
ஆனால் அஜித் ரசிகர்கள் உட்பட எந்த ரசிகர்களையும் இந்த படம் திருப்தி படுத்தவில்லை. ஆனால் ஒரு வித்தியாசமான கதையாக இது அமைந்திருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அஜித் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார். எந்த ஒரு ஓபனிங் சீனும் கிடையாது. மாஸ் ஆக்சன் காட்சிகளும் கிடையாது .ஆனால் அஜித் ரசிகர்களுக்கு மாசான காட்சிகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிடிக்கும்.
அப்படி எதுவுமே இந்த படத்தில் இல்லாததால் எதிர்பார்த்த அளவு இந்த படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு படம் உள்ளானது. இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கும் பொழுதே மகிழ்திருமேனி ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார். அப்பொழுதே அமிதாப்பச்சனிடம் ஒரு கதை சொன்னாராம். அந்த கதை அமிதாப்பச்சனுக்கு மிகவும் பிடித்து போய் இருக்கிறது.
ஆனால் விடாமுயற்சி படத்தின் ரிசல்ட் என்னானது என்பது அனைவருக்குமே தெரியும். அதன் பிறகு அமிதாப்பச்சனை மகிழ் திருமேனியால் நெருங்கவே முடியவில்லை. இயக்குனர் என்பதையும் தாண்டி மகிழ் திருமேனி ஒரு நல்ல ரைட்டர் என்பது அனைவருக்குமே தெரியும் .இவர் ஏற்கனவே விஜய்யிடம் மூன்று கதைகளை சொல்ல அந்த மூன்று கதைகளுமே விஜய்க்கு பிடித்துப் போக அதில் ஏதாவது ஒரு கதையை நீங்களே தேர்வு செய்யுங்கள் என விஜய் சொன்னதாக ஒரு தகவல் இருக்கிறது .
அப்படித்தான் அமிதாப்பச்சனிடமும் கதை சொல்லி இருக்கிறார். ஆனால் கடைசியில் விடாமுயற்சி திரைப்படத்தால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இப்பொழுது மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை இல்லை. இனிமேலும் இருக்குமா என்பதும் தெரியவில்லை .அந்த அளவுக்கு விடாமுயற்சி திரைப்படத்தை ரசிகர்கள் வச்சு செய்தனர்.ஒரு வேளை அஜித் மீண்டும் மகிழ்திருமேனிக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பதையும் பார்க்க வேண்டும்.