பஹல்காம் தாக்குதல் - பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியீடு.!!
Seithipunal Tamil April 24, 2025 02:48 AM

காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியதுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாஇன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தப் படங்களை ஜம்மு - காஷ்மீர் போலீசார் வெளியிட்டுள்ளனர். அதன் படி இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் அஷிப் பவுஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகியோர் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 6 பேர் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது 3 பேரின் விவரங்கள் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த இந்தத் தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.