சேலம் மாவட்டம் காலி கவுண்டன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி சின்ன பொண்ணு. இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் என்ற மகனும், ஜமுனா என்ற மகனும் உள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று சின்ன பொண்ணு அவரது 7 வயது பேத்தியுடன் தூங்கி கொண்டிருந்தார். மாதையன் சந்தைக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்த போது ஆடை கிழிந்த நிலையில் உடலில் நக கீறல்களுடன் சின்னப்பொண்ணு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்ன பொண்ணுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதாவது பக்கத்து வீட்டில் வசிக்கும் காவேரி(43) என்பவருக்கு நீண்ட நாட்களாக சின்ன பொண்ணு மீது ஆசை இருந்துள்ளது. சம்பவம் நடந்த போது காவேரி சின்னப்பொண்ணுவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முன்றுள்ளார்.
அதற்கு காவேரி மறுப்பு தெரிவித்ததால் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் காவேரியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.