CBSE பொதுவாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்கும். கடந்த ஆண்டுகளின் அடிபடையில், 2025 ஆண்டின் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதத்தின் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சற்று முன் வெளியான தகவலின் படி மே 3 ஆம் தேதி, 2025 வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை, வரும் நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ இன் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் மாணவர்கள் சரிப்பார்க்கலாம். இது தவிர மாணவர்கள் SMS அல்லது DigiLocker மூலமாகவும் தங்களின் தேர்வு முடிவுகளை சரிப்பார்க்கலாம்.
CBSE தேர்வு முடிவுகளை 2025 சரிபார்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள்:
cbseresults.nic.in
cbse.gov.in
cbse.nic.in
results.cbse.nic.in
சிபிஎஸ்இ cbseresults.nic.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
CBSE Board Result 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும்
உங்கள் ரோல் எண் அல்லது பதிவு எண்ணுடன் உள்நுழையவும்
உங்கள் முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும்
கடைசியாக முடிவின் நகலை டவுண்லோட் செய்துக் கொள்ளவும்.
எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது?
CBSE 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை SMS மூலம் சரிபார்க்கலாம், இதற்கு மாணவர்கள் "CBSE 12 / 10 (ரோல் எண்) (DDMMYYYY - பிறந்த தேதி) (பள்ளி எண்) (மைய எண்)" என்று டைப் செய்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும்.எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, மாணவர்கள் தங்கள் முடிவு தொடர்பான தேவையான அனைத்து தகவல்களையும் பெறுவார்கள்.
DigiLocker இல் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?
digilocker.gov.in ஐப் பார்வையிடவும்.
உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும் (10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு).
தேவையான விவரங்களை உள்ளிடவும்: பள்ளி குறியீடு, ரோல் எண், 6 இலக்க பாதுகாப்பு.
"நெக்ஸ்ட்" என்பதைக் கிளிக் செய்யவும்.
OTP ஐச் சரிபார்க்கவும்: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
செயல்முறை முடிந்ததும், உங்கள் DigiLocker கணக்கு செயல்படுத்தப்படும்.
தொடர 'Go to DigiLocker account' என்பதைக் கிளிக் செய்யவும்.