தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் இளையராஜாவின் ஒரு பாடலை பயன்படுத்தியதற்காக அவர் 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் கங்கை அமரன் 7 கோடி சம்பளம் வாங்கிய இசையமைப்பாளரால் ஹிட் கொடுக்க முடியவில்லை, நாங்கள் இசையமைத்த ஒரே ஒரு பாடல் தான் அந்த படத்தையே வெற்றி பெற வைத்துள்ளது நாங்கள் அமைத்த பாட்டுக்கு மட்டும்தான் கைத்தட்டல் வருகிறது என்று கூறினார்.
இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகர் பிரேம்ஜி விளக்கம் கொடுத்துள்ளார். இவர் நடிகர் கங்கை அமரனின் மகன் ஆவார். இதுகுறித்து நடிகர் பிரேம்ஜி கூறியதாவது, என்னுடைய அப்பா அவருடைய அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்ற போது அவருக்கு ஆதரவாக அப்படி பேசி உள்ளார்.
அதேபோன்று நானும் என் அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் பேசுவேன் அல்லவா. இளையராஜாவால் தான் படம் ஓடியது என்று அவர் சொன்னதாக கேட்கிறீர்கள். அது எல்லாம் சும்மா. குட் பேட் அக்லி படம் ஓடியதற்கு காரணம் முழுக்க முழுக்க அஜித்குமார் மட்டும்தான். அஜித் படம் என்றாலே கண்டிப்பாக ஹிட் ஆகிவிடும் என்று கூறினார். மேலும் நடிகர் பிரேம்ஜியின் அண்ணன் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு என்பதும் அவர் இயக்கத்தில் மங்காத்தா உள்ளிட்ட படங்களில் அஜித் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.