அதிரடியாக உயர்ந்தது போல நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூ.2,200 குறைந்து சவரன் ரூ.72,120க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.275 குறைந்து ரூ.9,015க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 2-வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து 72,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து 9,005க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.