கல்லூரியில் படிக்கும்போதே டி.ராஜேந்தரை சுற்றி அதிக நண்பர்கள் இருப்பார்கள். அதற்கு காரணம் அப்போதே சொந்தமாக பாடல்களை எழுதி வகுப்பறையில் இருக்கும் டேபிளில் கையாலேயே தட்டி இசையமைத்து பாட்டு பாடுவார். 1980ம் வருடம் வெளிவந்த ஒரு தலை ராகம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தை இயக்கியது அவர்தான் என்றாலும் பட வியாபாரத்திற்காக வேறொருவரின் பெயரை போட்டார் தயாரிப்பாளர். இந்த தடையையெல்லாம் உடைத்து எறிந்து மேலே வந்து நின்றவர்தான் டி.ராஜேந்தர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இயக்கம் கலை, எடிட்டிங், நடிப்பு, தயாரிப்பு என திரையுலகம் தொடர்பான எல்லா துறையிலும் திறமை பெற்று சகலகலா வல்லவனாக இருந்தார்.
உயிருள்ள வரை உஷா, மைதிலி என்னை காதலி, தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ரஜினி, கமல் ஆகியோர் முன்னணி நடிகர்களாக இருக்கும்போது அவர்களுக்கு இணையாக டி.ராஜேந்தரின் படங்கள் வசூலை குவித்தது. எங்களுடைய கட்வுட் இருக்கும் இடத்தில் டி.ராஜேந்திரின் கட் அவுட்டை பார்த்து நானே ஆச்சர்யப்பட்டேன் என சமீபத்தில் தக் லைப் பட விழாவில் கமல் கூட பேசியிருந்தார்.
80,90களில் டி.ராஜேந்தர் இசையில் உருவான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைத்த பாடல் கேசட்டுகளை விட டி.ராஜேந்தரின் கேசட்டுகள் அதிகம் விற்பனை ஆனதாக கூட ஒரு செய்தி உண்டு. இதில் ஆச்சர்யம் என்னவெனில் டி.ராஜேந்தர் முறையாக இசையை கற்றவர் இல்லை. அவருக்கு எல்லாமே கேள்வி ஞானம்தான். அவருக்கு இசை என என்ன தோன்றுகிறதை அதையெல்லாம் ரசிகர்களுக்கு கொடுத்தார். இவரின் பாடல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது.
சிம்புவை சின்ன வயதிலேயே சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவரை உருவாக்கினார். காதல் அழிவதில்லை படம் மூலம் சிம்புவை ஹீரோ ஆக்கியவரும் இவர்தான். இப்போது திரைப்படங்கள் பாடி வருகிறார். இந்நிலையில்தான் தன்னை மாற்றியதே டி.ராஜேந்தர்தான் என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நான் பார்த்து இன்ஸ்பயர் ஆன மனிதர்களில் டி.ராஜேந்தர் சாரும் ஒருவர். இளையராஜா, எம்.எஸ்.வி சார், கே.வி.மகாதேவன் சார் என என பலரிடமும் நான் வேலை செய்திருக்கிறேன். ஆனால், டி.ஆர் சார்கிட்ட வேலை செய்யும்போது அவர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தனிமை விரும்பியாக இருந்த நான் எல்லோருடனும் கலகலப்பாக பழகும் நபராக மாறினேன். அதற்கு அவர்தான் காரணம்’ என சொல்லியிருக்கிறார்.