தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே சிவக்குமார் (30)-சீதாலட்சுமி (29) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு பட்டறையில் சிவக்குமார் வேலை பார்த்தார். ஆனால் அங்கு சரிவர வேலை இல்லாததால் கடந்த வாரம் சிவக்குமார் தன் குடும்பத்துடன் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பினார்.
இந்நிலையில் சீதாலட்சுமிக்கு திடீரென அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கணவனுக்கும் சரிவர வேலை இல்லாததால் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை நினைத்து சீதாலட்சுமி மிகுந்த மன வேதனை அடைந்தார். இதனால் அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.