ஏ.ஐ தொழில்நுட்பத்தை படத்தில் பயன்படுத்தி பார்த்திருப்போம். ஒரு படமே முழுக்க முழுக்க ஏ.ஐ ஆக இருந்தால் எப்படி இருக்கும்?
படமே ஏ.ஐ என்றால் குழப்பம் வருகிறதா? அதாவது அந்தப் படத்தில் வரும் நடிகர்கள், பாடல்கள் என அனைத்தும் ஏ.ஐ தான். இந்தப் படம் விரைவில் கன்னடத்தில் வெளியாக உள்ளது. தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை உருவாக்கியது பெங்களூரு அருகில் உள்ள சித்தஹல்லி கிராமத்தை சேர்ந்த நரசிம்மா மூர்த்தி என்பவர் ஆவார். இவர் நூதன் என்கிற ஏ.ஐ டெக்னீசியனுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.
95 நிமிடம் நீளும் இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தப் படத்தின் பெயர் 'லவ் யூ'.
இந்தப் படத்தில் நரசிம்மா மற்றும் நூதன் 30 ஏ.ஐ கருவிகளை பயன்படுத்தி உள்ளனர்.
சரி... சரி படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று தானே கேட்கிறீர்கள். இந்த மொத்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டே வெறும் ரூ.10 லட்சம் தான். மேலும், இந்தப் படத்தை 6 மாதத்தில் உருவாக்கி முடித்திருக்கிறார்கள்.
இது தான் இந்தியாவின் முதல் ஏ.ஐ திரைப்படம் ஆகும்.