காஷ்மீர் தாக்குதல்: இன்று அவச அனைத்துக் கட்சி கூட்டம்! இந்தியா திரும்பும் ராகுல்காந்தி!
WEBDUNIA TAMIL April 24, 2025 08:48 PM

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் கூட்டப்படுகிறது.

தெற்கு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய அரசு அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானியர்கள் விசா நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் பயணிகள், தூதர்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பஹல்காம் தாக்குதல் குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நிங் ஆகியோர் கலந்துக் கொளும் நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ராகுல் காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.