இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு.. அனைத்து வங்கிகளும் அக்டோபர் 31க்குள் bank.in டொமைனுக்கு மாற வேண்டும்!
ET Tamil April 24, 2025 05:48 PM
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து வணிக வங்கிகளும் (commercial Banks) தங்கள் இணையதள் முகவரியையும், இணையதள சேவைகளையும் 2025 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் bank.in என்ற Domainக்கு மாற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஏனெனில் சமீப காலமாகவே வங்கிக் கணக்குகளில் பணம் பறிபோகம் பயங்கரமான திருட்டில் போலி ஆசாமிகள் பலர் செய்து வருவதால், மக்கள் பாதுகாப்பு கருதி இந்த உத்தர்வு வந்துள்ளது. இனி அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஏன் இந்த மாற்றம் - இதன் அவசியம் என்ன? 1. பாதுகாப்பு: .bank.in டொமைன் என்பது அரசு அனுமதியுடன் வழங்கப்படும் பாதுகாப்பான டொமைனாகும். இது வாடிக்கையாளர்களை பிஷிங் (phising) மற்றும் போலி வலைத்தளங்கள் போன்ற மோசடிகளிலிருந்து பாதுக்காத்துக் கொள்ள உதவும். 2. வங்கிகள் மீது நம்பிக்கையை உருவாக்கும்: இதனால் வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை எளிதாக அடையாளம் காண முடியும். உதாரணமாக - www.abc.com என்பதற்கு பதிலாக www.abc.bank.in என்பதைப் பார்க்கும்பொழுது அது நம் வங்கிதான் என்ற பாதுகாப்பு உணர்வு மக்களிடையே உருவாகும். 3. இணைய மோசடிகளை தடுக்கும் முயற்சி: இந்த வலைத்தளம் மூலம் வாடிக்கையாளர்கள் போலியான வலைதளங்களை அடையாளம் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். இந்த டொமைன் கட்டுப்பாடு மூலம் மோசடி வலைத்தளங்களை தடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி மிகப்பெரிய முயற்சியை எடுத்துள்ளது. RBI இன் இந்த உத்தரவு எந்தெந்த வங்கிகளுக்கு பொருந்தும்!இந்த உத்தரவு முதற்கட்டமாக வணிக வங்கிகள் (commercial Banks) பொருந்தும். பிறகு மற்ற நிதி நிறுவனங்களுக்கும் இந்த முறை செயல்படுத்தப்படலாம். RBI இன் நோக்கம்!இந்த நடவடிக்கை வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கிகள் விரைவில் இந்த மாற்றத்தை செய்யும்பொழுது, வாடிக்கையாளர்களும் தங்கள் பழைய வங்கி தள முகவரிகள் செயல்படவில்லையெனில் புதிய bank.in முகவரிக்கு செல்லலாம்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.