இண்டெல் பணிநீக்கங்கள்.. புதிய சிஇஓ தலைமையில் 20% ஊழியர்கள் வேலை குறைப்பு!

இப்பொழுது ஐடி நிறுவனங்கள் மீண்டும் அதன் ஊழியர்களை குறைக்கும் பணியிம் மும்மரமாக ஈடுபட்டும் வரும் நிலையில், சிப் நிறுவனமான Intel நிறுவனம், 2025 ஆம் ஆண்டில் தனது ஊழியர்களில் 20%க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனால் சுமார் 21,000 ஊழியர்கள் வேலை பறிபோகும் வாய்ப்புள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கைகள், புதிய CEO லிப்-பூ டான் (Lip-Bu Tan) தலைமையில், நிறுவனத்தின் செயலதிறனை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. Intel நிறுவனம் பணிநீக்கத்திற்கான முக்கிய காரணங்கள் என்ன?
1. நிறுவனத்தின் மறுசீரமைப்பு: Intel நிறுவனம், கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டங்களை சமாளிக்கவும், போட்டியாளர்களுடன் (Nvidia, AMD) போட்டியிடும் திறமையை மேம்படுத்தவும், நிறுவனத்தின் கட்டமைப்பில் மாற்றங்களை செய்யவும் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
2. அதிகப்படியான மேலாண்மை அடுக்குகள்: நிறுவனத்தில் அளவுக்கு அதிகமான மேனேஜ்மெண்ட் அதாவது மேலாண்மை அடுக்குகள் உள்ளதால், முடிவெடுக்கும் செயல்திறன் மிக மந்தமாகி உள்ளது. இதனை சரிசெய்ய மிடில் அடுக்கில் இருக்கும் பதிவிகளை சரிசெய்ய, அந்த அடுக்கு நிலை பணிகளை குறைக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது.
3. செலவுகளை குறைக்கும் முயற்சி: Intel நிறுவனம், 10 பில்லியன் டாலர் செலவைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2024 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் சுமார் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதன் அடுத்த கட்டமாக 2025 ஆம் ஆண்டில் 20% அதாவது 21,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நிறுவனத்தில் பெரிய செலவுகளை குறைத்து, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
4. போட்டியாளர்களுக்கு இணையாக போட்டியிடும் முயற்சி: Nvidia மற்றும் AMD போன்ற நிறுவனங்கள், சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உயர் செயல்திறன் கொண்ட சிப்களை தயாரித்து விற்பதில் முன்னில வகிக்கிற்ன்றன. இது intel நிறுவனத்திற்கு கடும் போட்டியாக இப்பொழுது உள்ளதால், வேரு வழியே இல்லை அதை சரிசெய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இந்த பணிநீக்கங்கள் மூலம் சரியாக வேலை செய்யாத ஊழியர்களை நீக்கி, சரியான ஊழியர்களை பணியில் எடுத்து, போட்டி நிறுவனங்களுடன் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது.மேற்கூடிய இந்த நடவடிக்கைகளை செய்தால், Intel நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி கண்டிப்பாக ஒரு நல்ல நிலையில் இருக்கும் என்ற நோக்கத்துடன் பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.