விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடில், மீனாவுக்கு நடந்ததை அண்ணாமலை மிகவும் வருத்தத்துடன் விசாரிக்கிறார். “பணம் போனால் போய் விட்டு போகிறது. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்கிறது?” என்று அன்புடன் கோபித்துக் கொள்கிறார்.அப்போது அண்ணாமலை விஜயாவிடம், “உன்னுடைய நகையை கொடுத்து மீனாவுக்கு உதவி செய். இப்போதைக்கு பணம் பிரச்சனை தீரட்டும். அதன் பிறகு உன்னுடைய நகையை திருப்பிக் கொள்ளலாம்” என்று கூறுகிறார். அதற்கு விஜயா , “அதெல்லாம் முடியாது. இவளுக்காக ஏன் என் நகையை தர வேண்டும்? இவள் உண்மையிலேயே பணத்தை தொலைத்தாளா? அல்லது நாடகமா ஆடுகிறாளா என்று யாருக்கு தெரியும்? கொடுக்க முடியாது” என்று கூறுகிறார்.
அது மட்டும் இல்லாமல், “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, சமைக்கிற வேலையை பாரு” என்றும், மனிதாபிமானமே இல்லாமல் கூறுகிறார். இதனை ரவி, ஸ்ருதி, அண்ணாமலை உள்பட அனைவரும் கண்டிக்கின்றனர்.
மீனாவும் அண்ணாமலையிடம், “அத்தையின் நகை எனக்கு தேவையில்லை. நான் உழைத்து என்னுடைய கடனை அடைத்துக்கொள்வேன். நான் யாரிடமும் பொய் சொல்லவில்லை, ஏமாற்றவில்லை, யாருடைய நகையையும் திருடி அபகரிக்கவில்லை” என்று ரோகிணியை குத்திக் காட்ட, ரோகிணி உள்ளுக்குள்ள ஆத்திரம் அடைகிறார்.
இந்த நிலையில், மீனாவின் அம்மா, சீதா மற்றும் சத்யா ஆகியோர் மீனாவை பார்க்க வருகின்றனர். மீனாவை பார்த்து அவர்கள் வருத்தப்பட, விஜயா அவ்வப்போது குத்திக் காட்டுகிறார். அப்போது முத்து வந்து, மண்டபம் குறித்த விவரங்களை மீனாவிடம் கேட்டுவிட்டு, “நீங்கள் சாப்பிட்டுவிட்டு தான் போகணும்” என்று சொல்கிறார்.
விஜயா, “சாப்பாடா? இங்கே அத்தனை பேருக்கும் சமைக்கவில்லை” என்று கூற, “நான் ஹோட்டலில் வாங்கித் தருகிறேன்” என்று முத்து செல்கிறார்.
இந்த நிலையில், மனோஜ் ஷோரூம்க்கு வரும் ரோஹிணி ’உனக்காக சமையல் செய்து கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்ல, “நீ ஏன் இங்கு வந்தாய்? நீ இங்கு வந்தது தெரிந்தால் அம்மா திட்டுவார்கள்” என்று மனோஜ் சொல்ல, அதற்கு ரோகிணி “அப்போ உங்க அம்மா சொன்னா தான் என்னுடன் முன்பு போல் பழகுவாயா? உனக்கு என் மேல் லவ்வே இல்லையா? இப்ப கூட உனக்கு காய்ச்சலாக இருக்கிறது என்பதற்காக நான்தான் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன். உங்க அம்மா கொண்டு வரவில்லை…” என்று மனோஜ் கூறிவிட்டு கோபத்துடன் செல்கிறார்.
அப்போது கடையில் வேலை செய்கிறவர், “மேடம் இல்லாமல் கடையில் பிசினஸ் இல்லை” என்று கூற, “இதுல எல்லாம் நீ தலையிடாதே. போய் வேலையை பார்” என்று அனுப்பி விடுகிறார்.
இந்த நிலையில், விஜயா கிச்சனில் கஷ்டப்பட்டு சமையல் செய்து கொண்டு இருக்க, அங்கு வரும் பார்வதி, “நீ ஏன் சமையல் செய்கிறாய்?” என்று கேட்கிறார். அதற்கு, “அந்த பூ கட்றவ தான் போய் உட்கார்ந்து விட்டாளே” என்று கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
நாளைய எபிசோட் ப்ரோமோ வீடியோவில், மண்டப மேனேஜரிடம் முத்து விசாரிப்பதும், இந்த ஆர்டரை சிந்தாமணி தான் எடுத்திருக்கிறார் என்பதையும் கண்டுபிடித்த நிலையில், முத்து சிஐடி வேலை பார்த்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.