ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்கத்தலைவன், ரசவாதி என்று பல படங்களில் நடித்த ரம்யா சுப்பிரமணியன் கடைசியாக அஜித் நடித்து வெளியான விடாமுயற்சி படத்தில் நடித்தார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா சுப்பிரமணியன் அடிக்கடி ரீல்ஸ் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தான் ஏஐ மூலமாக அவரது புகைப்படங்கள், வீடியோக்களை மாற்றி பதிவிட்டு வருபவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: ஏஐ தொழில்நுட்பம் மூலமாக தனது வீடியோவை முறைகேடாக வெளியிடுபவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இனிமேலும் இது தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக வார்னிங் கொடுத்துள்ளார்.
" தனது வீடியோவைப் பயன்படுத்தி. அதில் வேறு ஒருவர் பேசுவது போல AI தொழில்நுட்பத்தின் மூலம் குரலை மாற்றி பதிவிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது மட்டும் இல்லாமல், இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, தனது வீடியோவை தவறாக பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது இது மூன்றாவது முறையாக நடக்கிறது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாய்ஸ் ஓவர் செய்து தவறாக பயன்படுத்தியுள்ளார்கள்.
இது சட்டத்திற்கு எதிரானது, நியாயமற்றது மற்றும் இது எனது காப்புரிமைகளுக்கு எதிரானது. இந்த வீடியோவை டெலிட் செய்யவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். உன்னை எச்சரிக்கிறேன்" என பதிவிட்டு சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்துள்ளார். இவரது இந்த பதிவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.