சமூகவலைதளங்களில் தன்னை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளராக காட்டிக்கொண்டு, வீடியோக்களை பதிவிட்டு வந்தவர், ஸ்ரீ விஷ்ணு குமார். இவர் தனது சமூகவலைதளங்களில் நேற்று வெளியிட்ட ஒரு வீடியோவில், நான் செய்தது தவறுதான், நண்பணின் தங்கையிடம தவறாக நடக்க முயற்சி செய்திருக்க கூடாது என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஷ்ணு ஒரே நாளில் ட்ரெங்கில் வந்துவிட்டார்.
ஒரு நாள் மட்டுமே பார்த்த நண்பனின் தங்கைக்கு, வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்து, தவறாக பேசியுள்ள விஷ்ணு, இந்த பெண்ணின் வீட்டுக்கே சென்றுள்ளார். ஆனால் இவர் தவறாக மெசேஜ் செய்கிறார் என்பதை தனது அண்ணனிடம் அந்த பெண் கூறியதை தொடர்ந்து வீட்டில் தனது நண்பர்களுடன் காத்திருந்த அந்த பெண்ணின் அண்ணன், விஷ்ணு உள்ளே வரவும் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அந்த வீட்டில் விஷ்ணுவை முட்டிப்போட வைத்த அவர்கள், அவரை சராமாரியாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இது குறித்து தற்போது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள ஸ்ரீ விஷ்ணு குமார், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், எனது அக்கவுண்டை ஹேக் செய்து, அதில் இருந்தே என் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இப்போ வரைக்கும் என்னை பிளாக்மெயல் செய்துகொண்டு இருக்கிறார்கள். எனது நண்பர் மூலகமாகத்தான் எனக்கு இவர்களை தெரியும். ஒரு பார்ட்டி என்று சொல்லி என்னை ட்ரேப் செய்து வரவைத்து நான் செய்யாத தவறில் சிக்க வைத்துவிட்டார்கள்.
நண்பனின் தங்கையிடம் நான் தவறாக நடந்தகொண்டதாக, சொல்கிறார்கள். நான் ப்ரண்ட்லியாக, பேசிய மெசேஜ், நான் யாரையும், வற்புறுத்தவோ, எனக்காக பயன்படுத்திக்கொள்ளவோ நினைக்கவில்லை. என்னை அடித்து உட்கார வைத்து, நாங்கள் கேட்கின்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு என்று சொல்லி வீடியோ எடுத்து, வெளியிட்டுள்ளனர். நான் ப்ரண்ட்லியா பேசியதாக சொன்னேன். அவர்களுக்கும் அது தெரியும். ஆனால் அவர்கள் ஒரு யோசனையில் இந்த வேலைகளை செய்துவிட்டனர்.
என்னை பின்னால் இருந்து அடித்து சித்திரவதை செய்து, கடலில் வைத்து 2 நாட்கள் சித்திரவதை செய்வோம். இங்கிருந்து உயிருடன் போகவே முடியாது. உன் போனை கொடு என்று வாங்கி, வீடியோ எடுத்தார்கள். 3 நாட்கள் வைத்திருந்து, என் மனைவியிடம் போனை கொடுத்திருக்கிறார்கள். அவரிடம் இருந்து தான் நான் போனை வாங்கினேன். ஒரு கோடி ரூபாய் கேட்டு என்னை மிரட்டுகிறார்கள். உயிர் பயத்தில் அவர்கள் சொன்னதை எல்லாம் நான் செய்தேன். இது குறித்து புகார் அளித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.