ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு தந்தை மற்றும் மகள் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றபோது, திடீரென ஒரு வெறித்தனமான காளை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இணையத்தில் பரவும் வீடியோவில், அந்தக் காளை முதலில் பெண்ணை கடுமையாக குத்தி கீழே தள்ளி, பின்னர் அசால்ட்டாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் தந்தை அந்த காளையிடமிருந்து தப்பிக்க முயன்ற போதும், காளையின் ஆவேசத்தால் தாக்குதலை நிறுத்த முடியவில்லை.
இந்த சம்பவம், நகரங்களில் அலைந்து திரியும் பராமரிக்கப்படாத பசுக்களால் ஏற்படும் ஆபத்து குறித்து மீண்டும் ஒருமுறை கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்கள் இது போன்ற பிரச்னைகள் குறித்து தொடர்ந்து புகார் அளித்தும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. சம்பவம் குறித்து அதிகாரிகள் எந்தவொரு விளக்கமும் தரவில்லை. இந்த நிலையில், பொதுமக்கள் இனிமேலும் இதுபோன்று நடக்காதவாறு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.