மத்தியப் பிரதேசம் திகம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராம்தயாள் அஹிர்வார் (வயது 50), டெல்லி நோக்கி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, பொதுப் பெட்டியின் கதவின் அருகே பீடி புகைத்துள்ளார். இதனால் கோபமடைந்த ரயிலில் பணியில் இருந்த காவல்துறையினர், அவரை தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே ராம்தயாள் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. இந்தக் கொடூர சம்பவத்தின் வீடியோவும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், ரயிலின் தரையில் ரத்தக்கறையுடன் அவர் சடலமாக கிடந்தது போன்ற காட்சிகள் மக்களின் மனதை உலுக்கியுள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் காவல்துறையின் அத்துமீறலையும், சட்டம் ஒழுங்கு நிலவரத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏழை தொழிலாளியை வெறும் பீடி புகைத்ததற்காக தாக்கி கொல்வது என்ன நீதிச் செயல் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். #JusticeForRamdayal எனும் ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி அறநிலையில் வரும் நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.