தெலுங்கானாவில் ஒரே திருமண மேடையில் இரண்டு இளம் பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின் இரண்டாவது மகனான அத்ரம் சத்ருஷாவ், அதே கிராமத்தைச் சேர்ந்த ஜங்குபாய் என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்த நிலையில் கெரமேரி மண்டலத்தில் உள்ள சங்கி கிராமத்தைச் சேர்ந்த உறவினரான மற்றொரு இளம் பெண் சன் தேவியையும் ஒரு வருடமாக காதலித்து வந்தார். சன் தேவிக்கும்- சத்ருஷாவ்க்கு 15 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனை அறிந்த முதல் காதலி ஜங்குபாய் தன்னையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். இரண்டு பெண்களும் பெரியவர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் சத்ருஷாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து திருமண பத்திரிக்கை அச்சிடப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் இரண்டும் பெண்களுக்கு தாலிக்கட்டி கொண்டு திருமணம் செய்து கொண்டார்.