மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்... முதல்வர் அறிவிப்பு!
Dinamaalai April 26, 2025 03:48 AM

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து, விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் நிச்சயமாக அவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான முகாம் நடைபெறவிருக்கிறது. எனவே, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால், தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.