நெஞ்சே பதறுதே..! “11 வயது மகனின் கண்முன்னே தாயை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்”… பண்ணை வீட்டில் பயங்கரம்…!!!
SeithiSolai Tamil April 26, 2025 03:48 AM

டெல்லியில் உள்ள ஸ்வரூப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் 37 வயதான பெண். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு 11 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் தனது 11 வயது மகளுடன் பண்ணை வீட்டின் வராண்டாவில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்த தர்மேந்திரா என்பவர் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அதன்பின் அந்தப் பெண் மற்றும் அவரது மகளின் கை, கால்களை கட்டி போட்டு விட்டு சிறுமியின் கண் முன்னே அவரது தாயை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தர்மேந்திராவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட தர்மேந்திரா பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மகளின் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.