Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.
பார்வதி மீனாவை வந்து பார்த்து கவனமாய் இருக்க வேண்டாமா ஏன் இப்படி அடிபட்டு இருக்கு என்கிறார். இது கூட பரவால்ல ஆன்ட்டி. சீதாவிடம் வாங்கிய காசை தான் தொலைத்து விட்டேன் எனக் கவலைப்படுகிறார். அவருக்கு ஆறுதல் சொல்லும் பார்வதி நீ ரெஸ்ட் எடு நான் விஜயாவை பார்க்கிறேன் என செல்கிறார்.
விஜயாவிடம் பேசிக் கொண்டிருக்கும் பார்வதி எனக்கு என்னமோ சிந்தாமணி மேல தான் சந்தேகமா இருக்கு. அவங்க கிட்ட வந்து சேர்ந்தது மீனாவை இந்த தொழிலில் இருந்து ஒதுக்குவதற்கு தான் என்கிறார். இதை கேட்கும் விஜயாவின் முகம் மாறுகிறது.
இப்படி அவளோட உயிரோட விளையாடுறது சரியா இருக்குமா? இந்த விபத்திலேயே அவளுக்கு ஏதாவது ஆயிருந்தா அந்த பாவம் உன்னையும் சும்மா விடாதே என்கிறார். இதை கேட்டு பதறும் விஜயா நீ சும்மா சொல்லாதே என்க அதெல்லாம் இல்ல உண்மையை தான் சொன்னேன்.
நீ அவங்கள போன் பண்ணி கண்டிச்சு வை என்கிறார். மண்டபத்திற்கு செல்லும் முத்து மற்றும் செல்வம் இருவரும் ஆர்டர் குறித்து விசாரிக்கின்றனர். அன்னைக்கு மீனாவுக்கு ரொம்ப நேரம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை அதனால் ஆர்டர் இன்னொருத்தவங்களுக்கு கொடுத்துடுவோம் என்கிறார்.
உடனே முத்து யாருக்கு கொடுத்தீங்க எனக் கேட்க சிந்தாமணி தான் மீனா வரமாட்டாங்க அவங்களுக்கு அடிபட்டுருச்சு எனக் கூற அவருக்கே ஆர்டர் கொடுத்து விட்டதாக மேனேஜர் சொல்லி செல்கிறார். பின்னர் வெளியில் வரும் முத்து, இப்ப இந்த பிரச்சனைக்கு பின்னாடி சிந்தாமணி தான் இருக்காங்கன்னு தெரியுதா என்கிறார்.
ஆனால் செல்வம் இது அவங்க மட்டும் தனியா பண்ண மாதிரி தெரியல வேற யாரோ உங்களுக்கு உதவி செஞ்சிருக்காங்க என சரியாகப் பாயிண்ட்டை பிடிக்கிறார். மீனா வீட்டில் மாலை கட்டிக் கொண்டிருக்கிறார். விஜயா அடிபட்டு உனக்கு காசை ஆசை பிடிச்சிருக்கா என கேட்க அப்போது வரும் முத்து அவருக்கு பதிலடி கொடுத்து அனுப்புகிறார்.
முத்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்க இன்னொரு மண்டபத்தில் மாலை ஆர்டர் இருக்கு அதை செய்து கொடுத்தால் டெக்கரேஷன் ஆர்டர் கிடைக்கும் என கூற அவரை பாராட்டி முத்து அவர் மீது பூவை கொட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் ரோகிணி பொறாமைப்பட்டு மனோஜை அழைத்து பார்க்க வைக்கிறார்.
ரூமிற்குள் சென்று பாரு அவங்களும் சண்டை போட்டு இருக்காங்க இப்போ ஒத்துமையா இல்லையா என கேட்கிறார். இங்கு நடந்தது சாதாரண விஷயம் இல்ல கண்ணாடியை உடைத்துவிட்டு மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிறது என்கிறார்.
பின்னர் முத்து, மீனாவை பார்த்து விஜயாவும் கடுப்பாகி போகிறார். அவரை அண்ணாமலை பார்த்து திட்டிவிட்டு படுத்து விடுகிறார். ரவி, ஸ்ருதி வர அவர்கள் இதை வீடியோவாக எடுத்து காட்டுகின்றனர். உடனே முத்து ரவியையும் பூ போட சொல்லி அதை அவர் வீடியோவாக எடுக்கிறார். இவர்கள் சிரித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் ரோகிணி பொறாமையால் அழுது கதவை சாத்துகிறார்.
அடுத்த நாள் காலை அருண் சீதாவிற்கு கால் செய்கிறார். அவரிடம் பேசும் சீதா மீனாவிற்கு நடந்த விஷயங்களை கூறி தன்னை மன்னித்து விடுமாறும் விரைவில் பணத்தை தருகிறேன் எனவும் கூறுகிறார். ஆனால் அருண் அவரை திட்டி பணத்துக்காக பழகினேனா என அவரை சமாதானம் செய்கிறார்.