விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில், இன்றைய எபிசோடில் மீனாவை பார்க்க பார்வதி வருவது, பார்வதியிடம் குறை சொல்லும் விஜயாவின் காட்சிகளும் உள்ளன. இதனை அடுத்து, மீனாவை பார்த்து ஆறுதலாக சில வார்த்தைகள் சொல்லிவிட்டு பார்வதி கிளம்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதை அடுத்து, முத்து, செல்வம் ஆகிய இருவரும் மண்டபத்திற்கு சென்று, மண்டபத்தின் ஆர்டர் யாருக்கு கிடைத்தது என்று விசாரிக்கின்றனர். மீனாவுக்கு ஏன் ஆர்டர் கிடைக்கவில்லை என்பதையும் விசாரிக்க, அந்த மண்டபத்தின் மேனேஜர் நடந்ததை கூறுகிறார். “மீனாவுக்கு அடிபட்டுவிட்டது, அதனால் அவள் வரமாட்டார். எனக்கு ஆதரவு கொடுக்க சிந்தாமணி சொல்லியதால், அந்த ஆர்டரை சிந்தாமணிக்கு கொடுத்தேன்” என மேனேஜர் விளக்குகிறார். இதனால், முத்து, சிந்தாமணி தான் இதற்குக் காரணம் என்பதை கண்டுபிடிக்கிறார்.
இந்த நிலையில், மீனா காயம் பட்ட கையோடு மாலை கட்டிக் கொண்டிருக்கும் போது, விஜயா அவளை திட்டுகிறார். அப்போது அங்கு வரும் முத்து, விஜயாவை நோஸ்கட் செய்து அனுப்பி விடுகிறார். அதன் பிறகு, மீனா மற்றும் முத்து இருவரும் ரொமான்ஸ் செய்கின்றனர். ஒருவர் ஒருவர் பூக்களை மாறிமாறி தூவி விளையாடுகின்றனர்.
அப்போது அதை பார்க்கும் ரோகிணி, மனோஜிடம் சென்று “அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க. நாம இப்படி இருந்து எவ்வளவு நாளாச்சு?” என்று சொல்கிறாள். அதற்கெல்லாம் காரணம் நீதான் என்று மனோஜ் பதிலடி கொடுக்கிறார். “இன்னும் அதை நீ மறக்கவே மாட்டாயா?” என்று சொல்வதற்கு, “மறக்க கூடிய காரியத்தையா நீ செய்திருக்கிறாய்” என்று கூற, ரோகிணி சோகமாகிறாள்.
அதன் பிறகு, முத்து-மீனா சந்தோஷமாக இருப்பதை பார்த்த விஜயா, வயிற்றெரிச்சலுடன் அண்ணாமலையிடம் சொல்ல, அவரோ, ‘சின்னஞ்சிறுசுகள் விளையாடிவிட்டு போகட்டும். இந்தா தண்ணி குடி” என்று கூறுகிறார்.
இதனை அடுத்து, சுருதி மற்றும் ரவி வர, அவர்களும் மீனா-முத்து ரொமான்ஸை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர், சுருதி அதை வீடியோ எடுத்து நெட்டில் போட போகிறேன் என்று சொல்ல, மீனா “வேண்டாம்” என்கிறார். அதன் பிறகு, சுருதிக்கு ரவி மலர்களை தூவ, இரண்டு ஜோடிகளும் சந்தோஷமாக ரொமான்ஸ் செய்கின்றனர்.
இதனை அடுத்து, சீதாவுக்கு அருண் போன் செய்கிறார். அருணிடம் சீதா தனது அக்காவுக்கு நடந்ததை கூற, அருண் மிகவும் வருத்தப்படுகிறார். “இப்போது நீ பணத்தைப் பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம், அக்காவை நன்றாக பார்த்துக்கொள்” என்று கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
நாளைய எபிசோடு ப்ரோமோவில், நாம் எல்லோரும் சேர்ந்து வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து, சிந்தாமணியிடம் இருந்து உண்மையை வரவழைக்க வேண்டும் என முத்து சொல்ல, முத்து, செல்வம், ரவி , சுருதி ஆகியோர் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் வேஷம் போட்டு செல்லும் காட்சிகள் உள்ளன.