காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க முயற்சித்து வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் முயற்சித்து வருகின்றனர். காஷ்மீரில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து, கனவில் கூட நினைக்காத வகையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாத செயல் கண்டிக்கத்தக்கது, அதை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்” என்றார்.