"இது அமித் ஷாவின் வேட்டைக்காடு அல்ல; இது தமிழ்நாடு" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Vikatan April 28, 2025 01:48 PM

கோவை சிவானந்தாகாலனி பகுதியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, ‘‘தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களுக்கு அடித்தளமிட்டது சுயமரியாதை இயக்கம் தான்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

பெரியார் தன் வாழ்நாளில் 13.20 லட்சம் கி.மீ தொலைவு பயணம் செய்தவர். அப்போதெல்லாம் இந்த காலத்தைப் போல் சாலை, மின்சார வசதிகள் இல்லை. பெரியார் தன் வாழ்வில் 10,700 பொதுக் கூட்டங்களில் பேசியவர்.

தி.மு.க இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகளை விட உண்மையான பெரியாரின் கொள்கை பேரனாக இருப்பதில்தான் பெருமை கொள்கிறேன்.

பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பு, பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் இணைக்கும் பழக்கம் இருந்தது.

பெரியார்

ஆனால், அவர் மறைந்த போது யாருடைய பெயருக்குப் பின்னாலும் சாதிப் பெயர் போடும் பழக்கம் இல்லை. நாட்டில் வேறு எங்கும் இல்லை.

தி.மு.க ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாசிஸ்ட்கள் வெறி பிடித்து அலைகிறார்கள்.

பாசிஸ்ட்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதால் அவர்கள் கதறுகிறார்கள். பா.ஜ.க-வோடு சேர்ந்து அ.தி.மு.க-வும் கதறுகிறது.

தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் காப்பாற்றுவதற்காகத்தான் முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். அதனால் நம்முடைய முதலமைச்சரின் பெயரைக் கேட்டால் அவர்களுக்குப் பயம் வருகிறது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

இது அமித்ஷாவின் வேட்டைக்காடு அல்ல. தமிழ்நாடு என்பதை நாம் புரிய வைக்க வேண்டும். அதற்கு 2026 சட்டசபைத் தேர்தல் என்ற போரில் நாம் வெற்றி பெற வேண்டும்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெறும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.