‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியவர் சூர்யா எனக் கூறி உருக்கமான உரையாற்றினார். சிறுவயதில் ‘கஜினி’ படத்தை பார்ப்பதன் மூலம் சூர்யாவின்மீது ரசிகனானதையும், அவர் உருவாக்கிய அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்கும் செயல்கள் தன்னை பெரிதும் பாதித்ததாகவும் தெரிவித்தார்.
“நான் மிகவும் புத்திசாலி மாணவன் இல்லையென்றாலும், விடாமுயற்சி என்னை இன்று இங்கு கொண்டுவந்தது. கல்வி மனிதனின் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய ஆயுதம்,” என்று விஜய் தேவரகொண்டா உருக்கமாக பேசினார். சூர்யாவின் செயல்பாடுகளால் உந்தப்பட்டு, தான் விரைவில் மாணவர்களுக்காக தனிப்பட்ட திட்டங்களை அறிவிப்பதாகவும் உறுதியளித்தார்.
நடிப்புத் துறையில் பறப்பதற்கு போராடிக்கொண்டிருந்த போது, சூர்யாவை சந்திப்பதே கனவாக இருந்தது எனவும், இன்று அவருடன் ஒரே நிகழ்ச்சியில் இருப்பவது தனக்கு எப்போதும் நினைவில் நிறைந்த ஒரு சிறப்பான தருணமாக இருக்கும் எனவும் கூறினார்.
அதன்பிறகு காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, “காஷ்மீர் நமதே, காஷ்மீரியர்களும் நம்முடைய மக்கள்,” என்று உரக்க கூறினார். காஷ்மீரில் ‘குஷி’ படப்பிடிப்பின் போது சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்த அவர், அப்பகுதி மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை நினைவு கூர்ந்தார்.
“இந்தியாவிற்கு பாகிஸ்தானுடன் போர் செய்யவே தேவையில்லை. அவர்கள் தங்களது குடிமக்களை கூட சரிவர பராமரிக்க முடியாமல் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் செய்யும் செயல்கள், 500 வருடங்களுக்கு முன் பழங்குடிகள் போர் செய்தது போலவே இருக்கிறது,” என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்தியா முழுவதும் மக்கள் ஒருமித்துப் பிற்பட்ட எண்ணங்களை தவிர்த்து, சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதையே முக்கியமாக வலியுறுத்தினார். “வழிகாட்டும் சாதனம் கல்வியே,” என்றும் தெரிவித்தார். அதன் பிறகு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூளை இல்லாதவர்கள். அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும். அங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத நிலையில் அவர்கள் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை கூட அவர்களால் சரி செய்ய முடியவில்லை என்றார். மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா மேடையில் பேசும்போது சூர்யா அமைதியாக கைக்கட்டி நின்றால் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.