நேற்று மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் விஜயகுமார் வெளியே சென்றதை அறிந்து இளவரசி தனது இரண்டு குழந்தைகளையும் வீட்ட அருகே உள்ள பயன்படுத்தப்படாத ஆழமான செப்டிக் டேங்க் தண்ணீரில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொள்ள நின்று கொண்டிருந்தார். அப்போது இளவரசிக்கு பயம் வரவே அலறினார். வீட்டருகே உள்ள உறவினர் பெண்ஓடி வந்து பார்க்கும் பொழுது தண்ணீரில் மூழ்கிய நிலையில் கத்தியது தெரியவந்தது.
உடனே அருகில் உள்ள ஒரு கயிறு மூலம் இளவரசியை மீட்டனர். பின்னர் இரண்டு குழந்தைகளும் உள்ளே இருந்தது தெரிய வந்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர் பரிசோதித்த நிலையில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.இளவரசி குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததால் இளவரசி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.