தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வருபவர் ரமா. இவரது வீட்டில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான வீடியோவில் ரமா என்ற பெண் தன்னுடைய மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடிக்கிறார்.
சிறுவன் என்றும் பாராமல் வீட்டு வாசலுக்கு வெளியே தன்னுடைய மகனை தரையில் தூக்கி அடித்து கொடூரமாக அடித்து துவைக்கிறார். இது குறித்த வீடியோ வைரலான நிலையில் அப்பகுதி மக்கள் கூறும் போது தினசரி மகனை இப்படித்தான் ரமா அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சிறுவனை மீட்டு பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக துபாயில் இருப்பதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.