Singappenne: சிங்கப்பெண்ணே தொடரில் ஆனந்தியின் கர்ப்பமும், அதை மறைக்க தோழிகளுடன் அவள் படும் பாடும் பார்வையாளர்களைக் கவர்ந்து இழுக்கிறது. அன்புவுக்கும், மகேஷூக்கும் கூட அவளுக்குக் கர்ப்பம் என்ற விஷயம் தெரியாது. இப்படி இருக்க ஆனந்தியின் பெற்றோருக்கும், வார்டனுக்கும், அன்புவின் அம்மா, தங்கை என யாருக்கும் தெரியாது. ஆனால் யாருக்குத் தெரியக்கூடாதோ அவளுக்குத் தெரிந்து விட்டது.
அவள்தான் மித்ரா. ஆனந்திக்கே தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது தெரியாத போது மித்ரா செய்த அந்தக் காரியம் தான் எல்லாத்துக்கும் காரணமாகி விடுகிறது. அதற்கான தடயத்தை பென் டிரைவில் விலை கொடுத்து ஆனந்திக்குத் தெரியாமல் வாங்கி விடுகிறாள். அதைத் தனது அறையில் பத்திரமாக ஒளித்தும் வைக்கிறாள். அன்பு ஆனந்தியின் பிரச்சனைக்கு என்ன காரணம் என தெரிய எவ்வளவோ முயற்சி செய்கிறான். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிகிறது.
இந்த நிலையில் சௌந்தர்யாவை ஆனந்தியின் ரூமில் தங்க வைக்கலாம் என முடிவு செய்கிறான். அப்படி தங்க வைத்தால் சௌந்தர்யா எப்படியும் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு தன்னிடம் சொல்லி விடுவாள் என எதிர்பார்க்கிறான் அன்பு. அவனின் எண்ணப்படியே ஆனந்தியின் கர்ப்பம் குறித்த தகவல் சௌந்தர்யாவுக்கும் கிடைக்கிறது.
ஆனால் அவளோ நம்ப மறுக்கிறாள். மெடிக்கல் ஷாப்பிற்கு ஆனந்திக்கு மாத்திரை வாங்கச் செல்கிறாள். அப்போது கடைக்காரன் இவளிடம் இந்த மாத்திரை யாருக்கு? கர்ப்பமாக இருப்பவர்களுக்குத் தான் கொடுக்கணும் என்று சொல்லி விடுகிறான். இது சௌந்தர்யாவுக்குக் கடைக்காரன் மீது எரிச்சல் பட வைக்கிறது. தொடர்ந்து பிரச்சனை செய்தபடியே ஆனந்தியின் ரூமுக்கு வந்து நடந்ததைச் சொல்கிறாள். ஆனந்தி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாள் என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.
இன்றைய எபிசோடில் சௌந்தர்யா தெரியாமல் மித்ராவின் ரூமுக்குப் போய் அலப்பறை பண்ணுகிறாள். இது மித்ராவின் தோழிகளுக்குத் தெரிய அவர்களிடமும் சௌந்தர்யா அலப்பறை செய்கிறாள். கடைசியில் ஆனந்தி அண்டு கோ வந்து அவளை மீட்டு தன் அறைக்குக் கொண்டு வருகிறார்கள். இந்தக் காட்சியில் சௌந்தர்யா வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுகிறாள். மித்ரா ஒளித்து வைத்த பென் டிரைவ் சௌந்தர்யாவின் கைகளில் சிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.