அட்சய திருதியை: `10 கிராம் தங்கத்தின் விலை ரூ.99,000!' - தங்கம் விலை நிலவரம் என்ன?
Vikatan April 30, 2025 09:48 PM
நேற்றை விட, தங்கம் விலை...

இன்று அட்சய திருதியை. 2024-ம் ஆண்டு அட்சய திருதியையின் போது மூன்று முறை தங்கம் விலை மாறியது குறிப்பிடத்தக்கது. இன்று ஒரு முறை விலை மாற்றத்தோடு நின்றுவிடுமா... அல்லது சென்ற ஆண்டைப்போல தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், நேற்று விற்பனையான அதே விலையில் தொடர்கிறது.

ஒரு கிராம் தங்கம் விலை...

இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.8,980 ஆகும்.

ஒரு பவுன் தங்கம் விலை...

இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.71,840 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளி...

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.111 ஆகும்.

35.3 சதவிகித உயர்வு தங்கம்

கடந்த ஆண்டு அட்சய திருதியையின் போது (மே 10, 2024) 10 கிராம் (24Kt) தங்கத்தின் விலை ரூ.73,200 ஆக இருந்தது.

இன்று, அதே 10 கிராம் (24kt) தங்கத்தின் விலை ரூ.99,000 ஆக உயர்ந்துள்ளது. இது 35.3 சதவிகித உயர்வாகும்.

தங்கத்தின் மீது தொடரும் முதலீடுகள் மற்றும் உலக அளவிலான அரசியல் மற்றும் சந்தை மாற்றங்களால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.