பரபரப்பு வீடியோ... பட்டப்பகலில் குறுகிய சாலையில் பிரபல ரவுடி மீது திடீர் துப்பாக்கி சூடு…. !
Dinamaalai May 01, 2025 02:48 AM

பஞ்சாப் மாநிலத்தில்  அம்ருத்சர் நகரத்தில் கத்தியான் வாலா பஜார் பகுதியில் வசித்து வருபவர் பிரபல ரவுடியான ரவ்னித் சிங். நேற்று இவர் தனது நண்பருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது  இருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இதில் படுகாயமடைந்து ரவ்னித் தரையில் விழுந்துவிட்டார். இது குறித்த CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

சம்பவ இடத்தில் இருந்த ரவ்னித் சிங்கின் நண்பர் ஒருவர் துப்பாக்கி எடுத்து தாக்கியவர்கள் மீது பதிலடி  கொடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர், போலீசார் விரைந்து வந்து ரவ்னித் சிங்கை மீட்டு அம்ருத்சர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அம்ருத்சர் ADCP விஷால்ஜித் சிங் இது குறித்து  “இருவர் ரவ்னித் சிங்கை சுட்டனர். சம்பவ இடத்துக்கு நாங்கள் விரைந்து வந்தோம். விசாரணை நடைபெற்று வருகிறது. சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.  குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” எனக் கூறியுள்ளார்.  ரவ்னித் சிங்கை முன்விரோதம் காரணமாக தாக்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.