அமெரிக்காவில் வாஷிங்டனைச் சேர்ந்தவர் அனிதா ரெயினர் தனது கணவரிடம் ஆலோசித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சியாட்டின் நகருக்கு வெளியே ஒரு புதிய வீட்டை வாங்கி குடியேறினார். அந்த வீட்டை அவர்கள் புதுப்பிக்க திட்டமிட்டனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சமையலறைக்கு சென்று என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என பேசிக்கொண்டிருந்த போது அலமாரியில் ஒரு காகித துண்டு கிடந்தது. அந்த காகிதம் சுருட்டி மறைக்கப்பட்டிருந்தது.
அதில், தரைக்கு அடியில் பார்க்க வேண்டாம் என எழுதி இருந்தனர். மேலும் காகிதத்தின் பின்பக்கம் சில எண்கள் எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியைந்த தம்பதியினர் அந்த எண்கள் எதை குறிக்கிறது என்பதை கண்டுபிடிக்க முயன்றனர். இந்த சம்பவம் குறித்துதம்பதியினர் ரெடிட் தளத்தில் பதிவிட்டனர்.
அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் இதற்கு முன்பு குடியிருந்தவர்கள் இந்த தம்பதியை கேலி செய்திருக்கலாம். அது நகைச்சுவையான பரிசு மட்டுமே என பதில் அளித்து வந்தனர். இந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.