என்னப்பா நடக்குது…! கடற்கரையில் ஹீரோயினை துரத்தி சென்ற கெளதம் மேனன்…. வைரலாகும் வீடியோ…!!
SeithiSolai Tamil April 30, 2025 10:48 PM

நடிகர் சந்தானம் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் அந்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் லொள்ளு சபா புகழ் ராம் பாலாவின் இயக்கத்தில் சந்தானம் தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தின் இரண்டாவது பாகமும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம், யாஷிகா ஆனந்த், கௌதம் மேனன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சற்று முன் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கௌதம் வாசுதேவ் மேனனும், யாஷிகா ஆனந்தும் காக்க காக்க திரைப்படத்தில் இடம் பெற்ற உயிரின் உயிரே பாடலில் வருவதை போலவே ஒரு காட்சியில் நடித்துள்ளனர். சூர்யா எப்படி பாடிக்கொண்டே ஜோதிகாவை துரத்துவாரோ அதேபோல கௌதம் மேனன் துரத்துகிறார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.